நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள இமாம்வாடா காவல் நிலையத்தில் கடந்த 12ம் தேதி 28 வயது பெண் மருத்துவர் ஒருவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், “தனக்கும், ஒரு ஆணுக்கும் கடந்த 2022 நவம்பரில் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு பேசி வந்தோம். இந்த அறிமுகம் ஏற்பட்டபோது நான் மருத்துவம் படித்து வந்தேன். அந்த நபர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்து வந்தார். எங்கள் அறிமுகம் தொலைபேசி அழைப்புகளாக மாறி, பின்னர் நேரில் சந்தித்து நண்பர்களாக மாறினோம்.
அப்போது என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அந்த நபர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைத்த பிறகு அந்த நபர் என்னை தவிர்த்து பேசுவதை நிறுத்தி, திருமணத்துக்கும் மறுத்து விட்டார். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
The post திருமணம் செய்து கொள்வதாக கூறி நாக்பூரில் பெண் டாக்டர் பலாத்காரம் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு appeared first on Dinakaran.