பீகார்: தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பீகாரில் ரூ.13,480 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது; தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது.
கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்” என்றார்.
The post தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும்: பிரதமர் மோடி ஆவேசம்! appeared first on Dinakaran.