புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் பாகிஸ்தானி-அமெரிக்கருமான டேவிட் ஹெட்லி.