டெல்லி: தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டது இந்தியாவில் தங்க கடத்தல் அதிகரித்துள்ளதை படம் பிடித்து காட்டியுள்ளது. 2023-24ல் மட்டும் சுமார் 5 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டாலும் துபாயிலிருந்து தான் அதிகளவில் தங்கம் கடத்திவரப்படுகிறது. தங்க கடத்தலில் ஈடுபடும் நபருக்கு 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
சிறை தண்டனை மட்டுமின்றி ஒருவர் கடத்தும் தங்கத்தின் மதிப்பை விட 3 மடங்கு அளவிலான தொகை அபாரதமாகவும் விதிக்கப்படும். இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 4,869 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 1,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அதிக அளவியல் தங்கம் கடத்தப்படுவதற்கும் இந்தியாவின் தங்கத்தின் மீதான வரி விதிப்பே முக்கிய காரணமாக உள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,020க்கு விற்கப்படும் நிலையில் துபாயில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,740 ஆக உள்ளது. இதனால் துபாயிலிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி வந்து இந்தியாவில் அதிக விலைக்கு விற்பதற்காகவே கடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆண் 20 கிராம் தங்கமும், பெண் 40 கிராம் தங்கமும் மட்டுமே சுங்கவரி இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டுவர முடியும். அதற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் ஒரு கிலோவிற்கு 38 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிக வரிவிதிப்பு காரணமாகவே துபாயில் குறைந்த விலைக்கு கிடைக்கும் தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post துபாயில் குறைந்த விலைக்கு விற்பனையாகும் தங்கம்: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கடத்தலால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை appeared first on Dinakaran.