சென்னை: துபாய் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா என இந்திய கிரிக்கெட் அணியினரை நோக்கி எழுப்பப்படும் கேள்வி நியாயமானது அல்ல என விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
“பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நோக்கி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘இந்தியா துபாய் மைதானத்தில் மட்டும் ஆடுவது சாதகமா?’ என்ற கேள்வி நியாயமானது அல்ல. இந்திய அணி தரமான கிரிக்கெட் ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.