ஹைதராபாத் : தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பலவீனப்படுத்த பாஜக சதி செய்கிறது என்றும் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
The post தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் : ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.