நாகர்கர்னூல்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அடுத்த ஊர்கொண்டாப்பேட்டையில் அமைந்துள்ள ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு 35 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்தார். இரவு நேரம் என்பதால் கோயில் வளாகத்தில் பெண் உட்பட அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக கோயில் வளாகத்திற்கு வெளியே அந்தப் பெண் சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த தனது உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்த 7 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணையும், உறவினரையும் திடீரென தாக்கினர். உறவினரை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்.
பின்னர் ஏழு பேர் கும்பல் அந்தப் பெண்ணை மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். குறைந்தபட்சம் குடிக்கத் தண்ணீராவது கொடுங்கள் என்று அந்தப் பெண் கதறிய போது, அந்த காமவெறியர்கள் அந்தப் பெண்ணுக்கு கருணை காட்டவில்லை. மாறாக அவர்கள், அந்தப் ெபண்ணில் வாயில் சிறுநீரை கழித்தனர். மேலும் அந்தப் பெண் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர். மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண் சில மணி நேரம் கழித்து கண் விழித்து பார்த்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அழுதார்.
பின்னர் மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த உறவினரை அவிழ்த்துவிட்டு, அடுத்த நாள் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் எஸ்பி வைபவ் கெய்க்வாட் ரகுநாத் கூறுகையில், ‘கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். ஏழு குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்’ என்றார்.
The post தெலங்கானாவில் பயங்கரம்; கோயிலுக்கு சென்ற பெண் கூட்டு பலாத்காரம்: குடிநீர் கேட்டதற்கு வாயில் சிறுநீர் கழித்த காமக்கொடூரன்கள் appeared first on Dinakaran.