டெல்லி: ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு ஒன்றிய அரசு ரூ.37,906 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி கோரியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி கோரியிருந்தது.
இந்நிலையில் 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-இல் 4 மாநிலங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கியது. ஆந்திரா -ரூ.608 கோடி, நாகாலாந்து ரூ.171 கோடி, ஒடிசா ரூ.255 கோடி, தெலங்கானா ரூ.232 கோடி, திரிபுரா -ரூ.289 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு கோரப்பட்ட நிதியை ஒதுக்கவில்லை.
மழை வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மழை வெள்ள பாதிப்புகளுக்கான பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மீண்டும் வஞ்சித்துள்ளது.
The post தேசிய பேரிடர் நிதி; தமிழ்நாட்டுக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்படவில்லை: 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.