கர்நாடகா: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து நம்பகத்தன்மையற்றது என சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயம்புத்தூர் வந்தடைந்தார். நேற்றையதினம் திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களை அவர் திறந்து வைத்தார். பின்னர், பேசிய அவர் தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ள பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை ஒன்று கூட குறையாது. கூடுதலாக கிடைக்கும் என்றும். இந்திய முழுவதும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும். எந்த மாநிலத்திற்கும் ஒரு இடம் கூட கிடைக்காது என்பதை பிரதமர் உறுதி செய்துள்ளார் என தெரிவித்தார். இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு தமிழ்நாடு முதல்வரை தொடர்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து தவறான விளக்கத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார் என தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை: அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று அமித் ஷா கூறியுள்ளது திசைதிருப்பும் செயல். தவறான தகவல்கள் அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கலாம் என்று கர்நாடக முதலமைச்சர் கருத்து தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை மட்டம்தட்டும் வகையில் அமித்ஷா பேசியிருக்கக்கூடும்.
1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மறுவரையறை
1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். மக்களவை தொகுதிகளை அதிகரித்தால் இப்போதுள்ள அதே விகிதாச்சாரத்தில் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் வேண்டும். மக்களவைத் தொகுதிகளில் தென் மாநிலங்களுக்கு தற்போது இருக்கும் பங்கைக் குறைக்கக் கூடாது.
2021 மக்கள்தொகை அடிப்படை என்றால் பாதிப்பு
2021 அல்லது 2031ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாகக் கொன்றால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போதைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் கர்நாடகத்தின் தொகுதிகள் 28லிருந்து 26ஆக குறைந்துவிடும். ஆந்திராவில் 42லிருந்து 34 ஆகவும் தமிழ்நாட்டில் 39லிருந்து 31ஆகவும் கேரளத்தில் 20லிருந்து 12ஆகவும் தொகுதிகள் குறையும். உ.பி.க்கு 80லிருந்து 91 ஆகவும் பீகாருக்கு 40லிருந்து 50ஆகவும், ம.பி.க்கு 29லிருந்து 33 ஆகவும் தொகுதிகள் உயரும். 2021 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் கடுமையாக குறைந்து விடும். இவ்வாறு தெரிவித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து நம்பகத்தன்மையற்றது: சித்தராமையா கண்டனம் appeared first on Dinakaran.