சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றால், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா எஃப்சி அணியை இரு முறை வீழ்த்தி சாதனை படைக்கலாம். கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அந்த அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.