சென்னை: தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.27.33 கோடியில் கட்டப்பட்ட அலுவலகங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ரூ.3.71 கோடியிலும், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிராமத்தில் ரூ.4.42 கோடியிலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத் துறை அலுவலக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.