பெங்களூரு : இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02 வழிகாட்டு செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 100வது ராக்கெட் விண்கலம் கடந்த புதன் கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. என்விஎஸ்-02 என்ற வழிகாட்டு செயற்கைக்கோள் புவிவட்ட பாதையில் செலுத்தப்பட்ட நிலையில், அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தனது சமூக வலைதலப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்விஎஸ்-02 செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளதாகவும் அதனை புவி வட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு மாற்று யுத்திகள் உருவாக்கப்பட்டு வருகிறது, “இவ்வாறு தெரிவித்துள்ளது.
The post தொழில்நுட்ப கோளாறால் இஸ்ரோ அனுப்பிய என்விஎஸ்-02 செயற்கைக்கோளில் பின்னடைவு!! appeared first on Dinakaran.