பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் கர்நாடக அரசின் இணை முதன்மை செயலாளரான கவுரவ் குப்தா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக ஏற்கனவே வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் விஐபிகளுக்கான சலுகை விமான நிலையத்தில் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கவுரவ் குப்தா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் விஐபிகளுக்கான சலுகை எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டது, இந்த விவகாரத்தில் நடிகையின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி ராமச்சந்திர ராவ் ஐ.பி.எஸ்-க்கு தொடர்ப்புள்ளதா என விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மட்டுமின்றி கர்நாடக சிஐடி போலீசார் தானாக முன்வந்து வழக்கி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நடிகை தங்க கடத்தல் வழக்கில் கர்நாடக அரசின் இணை முதன்மை செயலாளரான கவுரவ் குப்தா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் appeared first on Dinakaran.