கர்நாடகா: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க வருவாய் புலனாய்வுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியது. அடிக்கடி துபாய் சென்று வந்த ரன்யா ராவ் இதுவரை 100 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார். 100 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார் என்பதற்கான ஆதாரங்களையும் டி.ஆர்.ஐ. தாக்கல் செய்தது. நடிகை ரன்யா ராவின் தந்தையும் காவல் அதிகாரியுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்தாததற்கு காவல்துறை கண்டனம் தெரிவித்தது. விசாரணை முடிந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.