ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் பிரதானச் சாலை வழித்தடமான 206 கி.மீ. தூரமுள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை (என்.ஹெச்.208) ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலையாக (என்.ஹெச் 744) விரிவாக்கம் செய்ய 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.