மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. நாக்பூரில் வன்முறையின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. வன்முறை வெடித்துள்ள நாக்பூரில் அமைதி காக்க மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவுறுத்தியுள்ளார். சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
The post நாக்பூரில் வன்முறை: 144 தடை உத்தரவு அமல் appeared first on Dinakaran.