டெல்லி: நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (பிப். 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் அமர்வு நாளை ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விவாதத்திற்கு பின்னர் பிப்ரவரி 13-ம் தேதி கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைகிறது. 2-வது அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
The post நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.