டெல்லி: நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. மக்களவை அலுவல்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் பட்டியல் தமிழில் வெளியானது. தொடர் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நாடாளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. appeared first on Dinakaran.