புதுடெல்லி: நடைபெற இருக்கும் டெல்லி பேரவைத் தேர்தல் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பல ஆண்டுகள் நிலவிவரும் ஜுகல்பந்தியை அம்பலப்படுத்தும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கேலி செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்ன விஷயம் இது… நான் ராகுல் காந்தியைப் பற்றி ஒருவரிதான் சொன்னேன். ஆனால் அதற்கு பாஜகவிடமிருந்து பதில் வருகிறது. பாருங்கள் பாஜக எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஒருவேளை, இந்த டெல்லித்தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக திரைமறைவில் நடந்துவரும் ஜுகல்பந்தியை அம்பலப்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார். இத்துடன் பாஜகவின் அமித் மாளவியாவின் பதிவொன்றை இணைத்துள்ளார்.