நாமக்கல்: தமிழ்நாட்டில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்குக்கு அடுத்தபடியாக மஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
ஜேடர்பாளையம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், கொடுமுடி, துறையூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். விரலி மஞ்சள் ரூ.12,688 முதல் ரூ.16.399 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11,284 முதல் ரூ.13,569 வரையும், பனங்காளி ரூ.23,085 முதல் ரூ.26,599 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4,820 மூட்டைகள் ரூ.3.80 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post நாமக்கல்லில் ஒரே நாளில் 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.