புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் 31ம் தேதி தொடங்குகின்றது. இதனையொட்டி அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற இருக்கிறார். குடியரசு தலைவரின் உரைக்கு பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்வார். இதனை தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதியான சனியன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுகின்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக வருகிற 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் மானியக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 4ம் தேதி முடிவடையும். முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் மொத்தம் 27 அமர்வுகளை கொண்டிருக்கும்.
The post நாளை மறுநாள் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.