பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் துணை பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று பாஜ மூத்த தலைவர் அஸ்வினி குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜ தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அஸ்வினி குமார் சவ்பே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அஸ்வினி குமார்,‘‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ்குமாரின் பங்களிப்பு மகத்தானது.
கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திரமோடியின் கைகளை அவர் வலுப்படுத்தி வருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் துணை பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். எனது விருப்பம் நிறைவேறினால் பாபு ஜெகஜீவன் ராமுக்கு பிறகு பீகார் தனது மண்ணின் இரண்டாவது மகன் பதவியேற்பதை காணும்” என்றார்.
The post நிதிஷ்குமார் துணை பிரதமராக வரவேண்டும்: பாஜ மூத்த தலைவர் விருப்பம் appeared first on Dinakaran.