பெங்களூரு: நிலத்தகராறு தொடர்பாக புகாரளிக்க வந்த போது போலீஸ் ஸ்ேடஷன் கழிப்பறையில் வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசமாக இருக்கும் வீடியோ கர்நாடகா காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் பணியாற்றி வரும் போலீஸ் டிஎஸ்பி ராமசந்திரப்பா (50) என்பவர், மதுகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு ராமசந்திரப்பா அழைத்து செல்கிறார்.
அங்கு வைத்து அந்த பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருக்கிறார். இதனை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதும், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவதும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் என்றும், நிலப்பிரச்னை தொடர்பாக மதுகிரி போலீசில் புகார் அளிக்க வந்தவர் என்றும் தெரியவந்தது. அப்போது அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்திய ராமசந்திரப்பா, போலீஸ் நிலையத்தில் வைத்தே அவருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் பெண்ணுடன், ராமசந்திரப்பா ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் கர்நாடக காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால், போலீஸ் நிலையத்தில் வைத்து பெண்ணுடன் நெருக்கமாக இருந்த துணை போலீஸ் டிஎஸ்பி ராமசந்திரப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மதுகிரி போலீசார் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுகிரி போலீஸ் நிலையத்தில் இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பா, நிலத்தகராறு ெதாடர்பாக புகாரளிக்க வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். காவல் நிலையத்தில் இருக்கும் கழிப்பறைக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்றார். அவரது செய்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர், காவல் நிலையத்தில் டிஎஸ்பி பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதனை சமூக ஊடகங்களிலும் வைரலாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) விசாரணை நடத்தி, சீருடையில் இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பாவை சஸ்பெண்ட் செய்தார். 35 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை காவல் நிலையத்தின் ஜன்னல் வழியாக யாரோ பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் பெறப்பட்டு டிஎஸ்பி மீது துறை ரீதியான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கூறினார்.
The post நிலத்தகராறு தொடர்பாக புகாரளிக்க வந்த போது போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசம்: கர்நாடக மாநில காவல் துறையில் பரபரப்பு appeared first on Dinakaran.