திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 63,208 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,951 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.3.72 கோடி காணிக்கை கிடைத்தது.
கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில் சுவாமியை விரைவாக தரிசனம் செய்தனர். ஆனால் இன்று காலை முதல் திடீரென பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வெளிப்பகுதியில் சிலாதோரண வாயில் பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்கள் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டி உள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமையான அடுத்த 2 நாட்களுக்கு பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் எனக்கருதப்படுகிறது.
The post பக்தர்கள் வருகை திடீர் அதிகரிப்பு: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.