சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்யவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
அனைத்து மாநிலங்களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்றலைகள், நீர்மின் நிலையங்களை அமைத்து, மாநிலத்தின் பசுமை மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன. இந்த மின்நிலையங்களை மாநிலங்களின் மின்வாரியங்களும், தனியார் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன.