சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
> மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு நுண்கடன் வழங்கிட ஏதுவாக 25 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘அலைகள்’ திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்