சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், டரன் டரன் மாவட்ட போலீசார் 85 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அமிர்தசரஸ் அருகே உள்ள பிட்டேவாட் கிராமத்தை சேர்ந்த அமர்ஜோத் சிங் என்ற ஜோட்டா சாந்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து டிஜிபி கவுரவ் யாதவ், ‘‘ பாகிஸ்தான் எல்லை வழியாக பஞ்சாப்புக்கு கடத்தப்படும் போதை பொருட்களை சேர்த்து வைக்கும் மையமாக தனது வீட்டை அமர்ஜோத்சிங் பயன்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் போதை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது ’’ என்றார்.
The post பஞ்சாப்பில் 85 கிலோ ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.