பாட்னா: பீகாரில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரா நகரில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் காலை 10.30 மணிக்கு துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. 3 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் திடீரென துப்பாக்கிகளுடன் நகைக் கடைக்குள் புகுந்து மிரட்டல் விடுத்தனர்.
நகைக் கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை துப்பாக்கிகளை கொண்டு தாக்கி கைவரிசை காட்டினர். கொள்ளை கும்பல் துப்பாக்கியால் தாக்கியதில் நகைக்கடை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். நகைகளை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய போது போலீசார் விரட்டிச் சென்றனர். விரட்டிச் சென்ற போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் 2 கொள்ளையர்கள் காயம் அடைந்தனர்.
முட்டிக்கு கீழ் சுடப்பட்ட 2 கொள்ளையர்களையும் போஜ்பூர் போலீஸ் கைது செய்து நகைகளை மீட்டது. கைதான 2 பேரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், நகைகள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. தப்பியோடிய மேலும் 4 கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போஜ்பூர் போலீஸ் தேடி வருகிறது.
The post பட்டப் பகலில் சினிமா பாணியில் பீகாரில் நகை கொள்ளை: 2 கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.