பாலக்காடு : கோழஞ்சேரியை அடுத்த கிடங்ணூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் அனந்துநாத் (15), அபிராஜ் (15) ஆகியோர் உட்பட மூன்று மாணவர்கள் ஊராட்சி அலுவலகம் செல்கின்ற வாய்க்காலில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை சென்றனர். அங்கு அனந்துநாத், அபிராஜ் ஆகியோர் வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
மற்றொரு சக மாணவர் கரையில் நின்றபடி இருந்துள்ளார். அப்போது, குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இருவரையும் வாய்க்கால் தண்ணீர் அடித்துச் சென்றது. இவற்றை கரையில் நின்று பார்த்த சக மாணவர் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவலளித்தனர்.
பின்னர் உடனடியாக வந்த ஊர்மக்கள் மற்றும் கோழஞ்சேரி தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பத்தனம் திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோழஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, பத்தனாபுரம் அருகேயுள்ள குணிக்கோடு தனியார் பள்ளியில் படிக்கின்ற 9ம் வகுப்பு மாணவர் அஹது (14) ஆற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபகரமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து பத்தனாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
The post பத்தனம்திட்டா மாவட்டத்தில் 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.