புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74 சதவீத பணம் கிடைக்கிறது.
பயணிகள் வாகனங்கள் மூலம் 26 சதவீத பணம்தான் கிடைக்கிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்துக்கு பதிலாக, மாதாந்திர, வருடாந்திர பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்துவது பற்றி ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.
இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. கிராம மக்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கிராமங்களுக்கு வெளியே சுங்க வசூல் பூத்கள் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில், பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தற்போதைய கட்டண முறையை விட சிறப்பாக இருக்கும்’ என்றார்.
The post பயணிகள் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்துக்கு பதிலாக மாதாந்திர பாஸ்; ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.