டெல்லி: பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மதுரை – ராமேஸ்வரம் – தனுஷ்கோடி முனையம் ஆகிய புனித தலங்களை இணைக்கு வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.
மதுரை – பரமக்குடி வரையில் ஏற்கெனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும் என்று கூறினார்.
The post பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.