இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு, கலாத் பிராந்தியம்- அதாவது பலுசிஸ்தான் சுமார் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர, இறையாண்மை உள்ள நாடாக இருந்தது. பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் சேர விரும்பவில்லை, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவும் இத்துடன் ஒத்துப் போயிருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் சென்றபிறகு இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சமஸ்தானங்கள் சுதந்திர நாடுகளாக இருக்கமுடியவில்லை.