புதுடெல்லி: பஹல்காமில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் கடற்படை வீரர் வினய் நர்வாலும் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வினயிடம் தீவிரவாதிகள் அவரது மதம் குறித்து கேட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வெளியிட்ட அறிக்கையில்,பஹல்காம் சம்பவத்தினால் காஷ்மீரிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கை நாம் கொண்டிருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.அவருடைய இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஹிமான்ஷிக்கு தேசிய மனித மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வாலின் ஒரு அறிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படும் விதம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் அவரை விமர்சனம் செய்வது சரியல்ல என்று கூறியுள்ளது.
The post பஹல்காமில் உயிரிழந்த கடற்படை அதிகாரி மனைவி பற்றி ஆன்லைனில் விமர்சனம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் appeared first on Dinakaran.