ஸ்ரீநகர் : பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிஷ்த்வர் மலை வழியாக தப்பியோட முயற்சி என தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இதுவரை 4 முறை சுற்றிவளைத்தது இந்திய ராணுவம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்களை தீவிரவாதிகள் பறித்துச் சென்றனர். இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து தீவிரவாதிகள் உணவுகளை திருடிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிஷ்த்வர் மலை வழியாக தப்பியோட முயற்சி!! appeared first on Dinakaran.