மும்பை: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. குறுகிய கால விசா பெற்றவர்கள் வரும் 27ம் தேதிக்கு முன்பாகவும், மருத்துவ சிகிச்சைக்கான விசா பெற்றவர்கள் 29ம் தேதிக்கு முன்பாகவும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பாகிஸ்தானியர்களின் குறுகிய கால விசா ரத்து நடைமுறை அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், குறுகிய கால விசா பெற்றவர்களை விட நீண்ட கால விசா பெற்றவர்களே அதிகம் உள்ளனர். ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பலரும் இந்தியாவில் பல ஆண்டாக வாழ்ந்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருக்கும் நிலையில் அதில் 55 பேர் மட்டுமே குறுகிய கால விசா பெற்றவர்கள். அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார். கேரளாவில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். நேற்று வரை அவர்களில் 6 பேர் மட்டுமே நாட்டை விட்டு வெளியேறினர்.
The post பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்கள் வெளியேற வழங்கப்பட்ட கெடு முடிந்தது; வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் appeared first on Dinakaran.