ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தர என்.ஐ.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளது. காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு அதாவது என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு நேற்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தானில் இயங்கிவந்த பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக குறிவைத்து அழித்தது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் என்.ஐ.ஏ. தாக்குதல் நடந்த அன்று அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு உதவியதாக காஷ்மீரில் உள்ள சிலரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சம்பவத்தன்று சுற்றுலாப் பயணிகள் எதர்ச்சையாக எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் என்.ஐ.ஏ. கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தர என்.ஐ.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, சுற்றுலாப்பயணிகளிடம் தாக்குதல் நடந்த அன்று எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தால் உடனடியாக என்.ஐ.ஏ.வுக்கு அனுப்ப வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 9654958816 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவலை தெரிவிக்கலாம். பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படம், வீடியோ வைத்திருந்தால் உடனே தெரிவிக்க அனைத்து சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post பஹல்காம் தாக்குதல்: விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தர என்.ஐ.ஏ. வேண்டுகோள்!! appeared first on Dinakaran.