புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘‘தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்துள்ளோம். இந்திய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைகிறது. நள்ளிரவில் நமது படைகள் அதிதீரத்துடன் தாக்குதலை நடத்தியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்துவிட்டோம். தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன. சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு சல்யூட் அடிக்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை’’ என்றார்.
The post பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மட்டுமே அழிப்பு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி appeared first on Dinakaran.