டெல்லி: பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது எனும் வார்த்தையோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
The post பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசப்பணிக்கு தயார்: இந்திய கடற்படை அறிவிப்பு appeared first on Dinakaran.