சென்னை: “ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது கருணாநிதியே கூறியிருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஐவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.