கியோஞ்சர்: ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டம் மனோகர்பூர் கிராமத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய மிஷனரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது 2 மகன்கள் 1999ம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி எரித்துக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தாராசிங் மற்றும் அவரது உதவியாளர் மகேந்திர ஹெம்ப்ராம் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த மகேந்திர ஹெம்ப்ராம் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது 50 வயதாகும் அவர், சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
The post பாதிரியார் ஸ்டெயின்ஸ் கொலை 25 ஆண்டுக்கு பிறகு குற்றவாளி விடுதலை appeared first on Dinakaran.