சென்னை: தொழிற்சங்க கூட்டமைப்பினரின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் இன்றும் 2வது நாளாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டுள்ளன.. இதற்காக 2 நாள் பொது வேலை நிறுத்தத்தையும் கையில் எடுத்துள்ளன.
மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், சிஐடியு, ஐஎன்டியுசி, எம்எம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்திருந்தன.
2 நாள் ஸ்டிரைக் குறிப்பாக, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.