திருமலை: தெலுங்கு திரைப்பட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா நடித்த `டாக்கு மகராஜ்’ திரைப்படம் கடந்த 12ம் தேதி ஆந்திரா முழுவதும் திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்தின் முதல் காட்சியின் போது திருப்பதியில் உள்ள தியேட்டரில் அந்த படம் திரையிடப்பட்டது. அப்போது அவருடைய ரசிகர்கள் தியேட்டர் முன் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்து பாலகிருஷ்ணா சினிமா போஸ்டர் மீது ஆட்டு ரத்தத்தை தெளித்தனர்.
இந்த காட்சியை பாலகிருஷ்ணாவின் மற்ற ரசிகர்கள் உட்பட சினிமா பார்க்க சென்ற பொதுமக்களும் நேரில் பார்த்தனர். மேலும் ஆடு பலி கொடுத்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில் திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து பாலகிருஷ்ணாவின் ரசிகர்களான சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத், லோகேஷ் ஆகிய 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிந்தனர்.
The post பாலகிருஷ்ணா படம் வெளியான தியேட்டர் முன் கிடா பலி ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.