பாலக்காடு : பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கள் இறக்கும் தொழிலாளர் அமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணாவை ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்து பேசுகையில், கேரள மாநில அரசு மதுப்பான சட்ட மசோதாக்கள் பரிசீலனை செய்ய வேண்டும். கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தர வேண்டும்.
கள்ளுக்கடைகள் இடைவெளிகள் விடுவதை ரத்து செய்ய வேண்டும். மூடப்பட்ட கள்ளுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநில அரசு புதிய சட்ட விதிமுறைகளை விதித்து தொழிலாளர்களை துன்புறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
முன்னதாக, போராட்டத்திற்கு பாலக்காடு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் குட்டி தலைமை வகித்தார். கள் இறக்கும் தொழிலாளர் அமைப்பை சேர்ந்த கிருஷ்ணன், ராஜன், ஆறுமுகன், கண்ணன் குட்டி, சகதேவன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
The post பாலக்காடு கலெக்டர் அலுவலகம் முன்பு கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.