புதுடெல்லி: 2024-25ம் நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎப்) வட்டி விகிதம் முடிவு செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழுவின் 237வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், பிஎப் வருடாந்திர வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இபிஎப்ஓ திட்டத்தில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி வரவு வைக்கப்படும். 2022-23ம் நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதம் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டாக 8.25% ஆக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
The post பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக ஒப்புதல் appeared first on Dinakaran.