மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குகுழுக் கூட்டத்தில் சைகியா போட்டியின்றி புதிய செயலராக தேர்வானார்.