புதுடெல்லி: மாருதி சுசூகி நிறுவனம் பிப்.1 முதல் அனைத்து மாடல் கார்கள் விலையையும் உயர்த்துகிறது. மாருதி சுசூகி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனத்தின் தயாரிப்பில் உற்பத்தி பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதால், கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். செலவு குறைப்புக்கு முயற்சி செய்தாலும், அதிகரித்த செலவுகளில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதன்படி செலேரியோ விலை ரூ.32,500 அதிகரிக்கும். இன்விக்டோ, ரூ.30,000,வாகன் ஆர் ரூ.15,000,ஸ்விப்ட் ரூ.5000, எஸ்வியூ பிரெஸ்ஸா,கிராண்ட் விடாரா ஆகியவற்றின் விலைகள் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.25,000 உயர்த்தப்படுகிறது. ஆல்டோ கே.10 காரின் விலை ரூ.19.500, எஸ்.பிரஸ்ஸோ ரூ.5000 உயர்கிறது. பலேனோ ரூ.9000,பிரான்க்ஸ் ரூ.5,500 டிசையர் விலை ரூ.10,000 உயர்த்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிப்.1ம் தேதி முதல் அனைத்து மாடல் கார்கள் விலை ரூ.32,500 வரை உயர்கிறது: மாருதி சுசூகி அறிவிப்பு appeared first on Dinakaran.