அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் வானொலி அதன் தனித்தன்மையை இழக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. வானொலி மூலம் அறியும் செய்திகளுக்கு என்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ ‘பிப்ரவரி 13’யை உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 2012ஆம் ஆண்டு முதல் ‘உலக வானொலி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13, உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.