புதுடெல்லி: மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாட்டுக்கு கல்வி தொகையை விடுவிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளதால் மோதல் போக்கு நீடிக்கிறது. இதையடுத்து வரும் 6ம் தேதி தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் எக்ஸ் தள பதிவில், “பிரதமர் மோடி தேசிய மற்றும் உலகளவில் தமிழ் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த அனைத்துவித தீவிர முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
காங்கிரஸ் 70 ஆண்டுகளில் செய்ததை விட பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிகமாக செய்துள்ளார். காங்கிரஸ் தமிழ்நாட்டை எவ்வாறு எல்லாம் ஏமாற்றியது என்பது மக்களுக்கு தெரியும். கருப்புக்கொடி போன்ற தந்திரங்களும், முதலை கண்ணீரும் அந்த கட்சியின் அரசியல், அறிவுசார் மற்றும் தார்மீக திவால் நிலையை காட்டுகிறது” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
The post பிரதமருக்கு கருப்புக்கொடி காங்கிரசுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.