மும்பை: பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் காயமடைந்தார். வீட்டுக்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மும்பையில் உள்ள வீட்டிற்கு திருட வந்த நபரை தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷர்மிளா தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியின் மகன் சைஃப் அலி கான். இவர்ர் 1993 இல் பரம்பரா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனை தடுக்க முயன்ற சைஃபை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் மும்பை கான் பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து, பாந்த்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது!! appeared first on Dinakaran.