பிரபாஸ் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனுபம் கெர். ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அனுபம் கெர்.
பிரபாஸ் உடன் நடிப்பது குறித்து, “இந்திய சினிமாவின் பாகுபலியுடன் எனது 544-வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அற்புதமான குழுவினரால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனது அருமை நண்பரும், புத்திசாலி ஒளிப்பதிவாளரான சுதீப் சாட்டர்ஜி தான் இதில் பணியாற்றுகிறார்.